awisosplschool

awisosplschool

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

தேர்தல்கமிஷன்நடவடிக்கைஅறிவிக்கபடாதஎமர்ஜென்ஸியா?

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரணாப் முகர்ஜி பேசினார்.

இலவச திட்டங்களை 2 பெரிய கட்சிகளும் அறிவித்துள்ளதே? இது மாநில அரசின் நிதி ஆதாரத்திற்கு ஆரோக்கியமானதா?

தி.மு.க. அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. சில திட்டங்களில் கொள்கை ரீதியாக சில மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது இயல்புதான். ஆனாலும் தி.மு.க. அரசின் செயல்பாடு மிகவும் திருப்தியாக உள்ளது.

காங்கிரஸ்
ஆட்சியில் பங்கு கேட்குமா?


முதலில் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம். தேர்தல் முடிவுக்கு பின்னர் அதுபற்றி அமர்ந்து பேசி முடிவு செய்வோம்.

மதிய
உணவுத் திட்டங்கள் மாநில நிதி நிலைமையில் பின்னடைவை ஏற்படுத்தாதா?

ஏழை-எளிய மக்களுக்கு சில திட்டங்கள் தவிர்க்க முடியாதவை. மதிய உணவு திட்டம் ஆந்திர மற்றும் குஜராத் மாநிலங்களிலும் பிரபலமான திட்டங்களாக உள்ளன. தமிழ்நாட்டிலும் இத்திட்டத்தை நிறைவேற்றி வரும் மாநில அரசு அதற்கான நிதி ஆதாரத்தை தாங்கக்கூடிய நிலையில் உள்ளது.
 

தேர்தல் கமிஷன் நடவடிக்கையை அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என்று கருணாநிதி கூறி உள்ளாரே?

தேர்தல் ஆணையம் அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட தன்னிச்சையான அமைப்பு. அதன் நடவடிக்கைகள் பற்றி கருத்து கூற நான் விரும்பவில்லை.

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக