awisosplschool

awisosplschool

திங்கள், 18 ஏப்ரல், 2011

மைக்ரோசாப்ட் வேர்டு 2007 :அவசியம்அறிந்துகொள்ளவேண்டியது

நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் மைக்ரோசாப்ட் வேர்டு 2007 தொகுப்பில், Default ஆக Calibri என்ற எழுத்துருவும், எழுத்துருவின் அளவு 11 புள்ளிகளாகவும், மற்றும் Default paragraph spacing 10 புள்ளிகளாகவும் இருக்கும். 

இதனால் அவரசமாக ஒரு கடிதம் உருவாக்கவோ, அல்லது ஏதேனும் ஆவணங்களை உருவாக்கும் பொழுதும், இதனை நமது தேவைக்கு மாற்றியமைக்க வேண்டிய நிலை உள்ளது. 2003 பதிப்பை பயன்படுத்தி வந்தவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் இதனை மாற்றியமைப்பது ஒரு வித எரிச்சலூட்டும் வேலையாகும். (கீழே உள்ள படத்தில் default paragraph spacing பிரச்சனையினால் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் உள்ள இடைவெளியை கவனியுங்கள்.)


வழக்கமாக இந்த பிரச்சனைக்கு, ஒவ்வொருமுறையும், அனைத்தையும் தேர்வு செய்து வலது க்ளிக் செய்து Paragraph பகுதிக்கு சென்று,





Don't add space between paragraphs of the same style எனும் Check box ஐ க்ளிக் செய்து சரி செய்ய வேண்டியிருக்கும். இதே போலத்தான் எழுத்துரு மற்றும் அளவு. இது ஒவ்வொரு முறையும் புதிய டாக்குமெண்டை உருவாக்கும் பொழுதும் நாம் சந்திக்கிற பிரச்சனை. இதற்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போம். 

மைக்ரோசாப்ட் வேர்டு தொகுப்பை திறந்து கொண்டு, Home Ribbon டேபில், Change Styles என்ற பொத்தானுக்கு கீழே உள்ள வலப்புறம் நோக்கிய சிறிய அம்புக்குறியை க்ளிக் செய்யுங்கள்.



இப்பொழுது திறக்கும் styles வசனப் பெட்டியில், கீழே உள்ள Manage Styles என்ற பொத்தானை க்ளிக் செய்திடுங்கள்.

அடுத்து திறக்கும் Manage Styles திரையில், Set Defaults டேபை க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுதுள்ள திரையில் தேவையான Font மற்றும் Font size ஐ மாற்றிக்கொள்வதுடன், Paragraph Spacing பகுதியில் After என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Auto என்பதை தேர்வு செய்து பின்னர், கீழே உள்ள New Documents based on this template என்பதை தேர்வு செய்து OK பொத்தானை சொடுக்குங்கள்.

அவ்வளவுதான். இதற்கு மேலாக நீங்கள் உருவாக்கும் டாக்குமெண்ட்களில் இந்த பிரச்சனை வராது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக