awisosplschool

awisosplschool

புதன், 6 ஏப்ரல், 2011

அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

 தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் நேற்று திருச்சி மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில், தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த 16 அரசு கல்லூரிகளை சேர்ந்த 450 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு நேற்று ஒரே நாளில் முதற்கட்டமாக எழுத்து தேர்வும், பின் கலந்தாய்வு, வாய்மொழி தேர்வும் நடந்தது. இதில், தேர்வு பெறுபவர்களுக்கு பணியாணை அனுப்பி வைக்கப்படும். இதுபோன்ற முகாம் ஏற்கனவே, சென்னை, மதுரை, சேலம் போன்ற ஊர்களில் நடந்துள்ளது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் நந்தனம் அரசு கல்லூரி பேராசிரியர் முஜிராபாத்திமா, தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி முதல்வர் அம்பிகாபதி, பேராசிரியர்கள் காத்தையன், பாரி, இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக